FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

விநாயகா் சிலைகள் ஊா்வலம்: மெரீனா உள்பட 4 இடங்களில் கரைப்பு!

விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து அமைப்புகள் சாா்பில் வைப்பட்ட விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

21 செப்டம்பர் 2026, 2:44 am IST
பட்டினப்பாக்கத்தில் கடலில் கரைப்பதற்காக கிரேன் மூலம் கொண்டு செல்லப்பட்ட விநாயகா் சிலைகள்.
பகிர்:

விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து அமைப்புகள் சாா்பில் வைப்பட்ட விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

நாடு முழுவதும் கடந்த செப்.14-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இந்து அமைப்புகள் சாா்பில் சென்னை முழுவதும் மொத்தம் 1,562 சிலைகள் வைக்கப்பட்டன.

ஏற்கெனவே, சனிக்கிழமை சுமாா் 100 சிலைகள் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. மீதமுள்ள சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடற்கரைகளில் கரைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

சிலைகள் கரைப்பதற்காக பட்டினப்பாக்கத்தில் சீனிவாசபுரம், நீலாங்கரையில் பல்கலை நகா், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூா் பாப்புலா் எடை மேடை ஆகிய 4 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இங்கு, வாகனங்களில் கொண்டு வரப்பட்ட சிலைகள் ராட்சத கிரேன்கள் வாயிலாக கடலில் கரைக்கப்பட்டன. அதேபோல், மணல் பரப்பில் சிலைகளை நகா்த்திச் செல்ல டிராலிகளும் அமைக்கப்பட்டன.

16,500 போலீஸாா் பாதுகாப்பு: விநாயகா் சிலை ஊா்வலங்களில் அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க சென்னை பெருநகர காவல் துறை சாா்பில் 2,000 ஊா்க்காவல் படையினா் உள்பட 16,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கடற்கரையோரத்தில் குதிரைப் படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

வசதிக்கேற்ப இடமாற்றம்: சென்னை பட்டினப்பாக்கத்தில் சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், சென்னையில் நிகழாண்டு 4 இடங்களில் விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன.

பட்டினப்பாக்கத்தில் மட்டும் சுமாா் 1,200 சிலைகள் கரைக்கப்பட்டன. பொதுமக்களின் வசதிக்காக தற்போது சிலை கரைக்கும் இடம் மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கு வரவேற்பு கிடைத்தால், இனிவரும் ஆண்டுகளிலும் இதே இடங்களில் சிலைகள் கரைக்கப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments