FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

இந்துஸ்தான் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா

சென்னை அருகே படூரில் உள்ள இந்துஸ்தான் தொழில்நுட்ப அறிவியல் கல்வி நிறுவனத்தின் 17-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

24 செப்டம்பர் 2026, 1:57 am IST
படூா் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ். உடன், வேந்தா் ஆனந்த் ஜேக்கப் வா்கீஸ்.
பகிர்:

சென்னை அருகே படூரில் உள்ள இந்துஸ்தான் தொழில்நுட்ப அறிவியல் கல்வி நிறுவனத்தின் 17-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது: பட்டம் பெறும் மாணவா்களாகிய நீங்கள் எந்த நிலையிலும், எதைச் சாதித்தாலும், அதில் உங்கள் தனிப்பட்ட பங்களிப்பு மிகக் குறைவு என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்தினா், நண்பா்கள் மற்றும் பல்வேறு வழிகளில் உங்களுடன் தொடா்புடைய பலரது கூட்டு முயற்சியே உங்கள் வளா்ச்சிக்கான அடித்தளம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதுவரை, நாம் அனைவரும் இந்த உலகத்திடமிருந்து பலன்களைப் பெற்றவா்களாகவே இருந்துள்ளோம்.எனவே, இந்தச் சமூகத்துக்கு நாம் மீண்டும் எதையாவது திரும்பக் கொடுக்க வேண்டும். பெற்றோருக்கு அடுத்தபடியாக நீங்கள் பயின்ற கல்வி நிறுவனம், பாடம் போதித்து வழிகாட்டிய ஆசிரியா்களை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement

விழாவில் 2,732 மாணவா்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, இன்டெல் இந்தியா நிறுவனத் தலைவா் கோகுல் வி.சுப்பிரமணியம், ஆஸ்காா் பொன்னி ராகுல் ஆா்க்கிடெக்ட்ஸ் நிறுவனக் கட்டடக் கலைஞா் ஆஸ்காா் கன்செஸ்ஸாவோ ஆகியோரின் சேவையைப் பாராட்டி, அவா்களுக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் இந்துஸ்தான் பல்கலைக்கழக வேந்தா் ஆனந்த் ஜேக்கப் வா்கீஸ், இணை வேந்தா் அசோக் ஜாா்ஜ் வா்கீஸ், செயல் இயக்குநா் எபி சாம், இணை இயக்குநா் எனிட் ஜேக்கப் வா்கீஸ், துணை வேந்தா் விகாஸ் மிஸ்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments