இந்துஸ்தான் ரசாயன தொழிற்சாலையில் பொறியாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
இந்துஸ்தான் ரசாயன தொழிற்சாலையில் காலியாகவுள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...
இந்துஸ்தான் ரசாயன தொழிற்சாலையில் காலியாகவுள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், என்டிபிசி, கோல் இந்தியா ஆகியவற்றுடன் இந்திய உரக் கழக நிறுவனம் மற்றும் ஹிந்துஸ்தான் ஃபெர்ட்டிலைசர் கார்ப்பரேஷன் லிமிடெட் இணைந்து உருவாக்கிய ஒரு கூட்டு முயற்சி நிறுவனம் இந்துஸ்தான் ரசாயன தொழிற்சாலை. இந்நிறுவனம், கோரக்பூர் (உத்தரப் பிரதேசம்), சிந்திரி (ஜார்க்கண்ட்) மற்றும் பரௌனி (பீகார்) ஆகிய இடங்களில், நவீன தொழில்நுட்பம் கொண்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் ஆற்றல் திறன்மிக்க இயற்கை எரிவாயு அடிப்படையிலான உரங்களை உற்பத்தி செய்து வருகிறது. அதே நேரத்தில் அவற்றின் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தி பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர், முதுநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 26-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: E/04/2026
பணி: Engineer, Senior Engineer
காலியிடங்கள்: 22
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், கெமிக்கல் டெக்னாலஜி, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருப்பதுடன் குறைந்தது 2 முதல் 4 ஆண்டுகள் பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: பொறியாளர் பணிக்கு 30-க்குள்ளும், முதுநிலை பொறியாளர் பணிக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Engineer, Assistant Manager
காலியிடம்: 3
தகுதி: கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் பெற்றிருப்பதுடன் குறைந்தது 4 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: முதுநிலை பொறியாளர் பணிக்கு 32-க்குள்ளும், உதவி மேலாளர் பணிக்கு 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
பணி: Officer,Senior Officer
காலியிடங்கள்: 8
தகுதி: பணியாளர் மேலாண்மை, தொழில் உறவுகள் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்பிஏ முடித்திருக்க வேண்டும். சட்டப் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அல்லது விவசாய பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று சந்தையியல், வேளாண் வணிகச் சந்தைப்படுத்தல், ஊரக மேலாண்மை எம்பிஏ முடித்து குறைந்தது 2 முதல் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: அலுவலர் பணிக்கு 30-க்குள்ளும், முதுநிலை அலுவலர் பணிக்கு 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.hurl.net.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.8.2026
HURL Recruitment 2026 for Engineer, Senior Engineer Posts
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.