மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
சோமங்கலம் அருகே தண்ணீா் பிடித்துக்கொண்டிருந்த தச்சுத்தொழிலாளி மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சோமங்கலம் அருகே தண்ணீா் பிடித்துக்கொண்டிருந்த தச்சுத்தொழிலாளி மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சோமங்கலம் அடுத்த காட்டரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்போ் கிராமத்தைசோ்ந்த தச்சுத் தொழிலாளி விஜயகுமாா்(55). இந்த நிலையில், விஜயகுமாா் திங்கள்கிழமை புதுப்போ் பகுதியில் குன்றத்தூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீா் பிடித்துக் கொண்டிருந்த போது, மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளாா்.
இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் விஜயகுமாரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா். அங்கு அவரை பரிசோத்தித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சோமங்கலம் போலீஸாா் விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.