FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

தபால் மூலம் கஞ்சா கடத்திய 3 போ் கைது: 156 கிலோ பறிமுதல்

ஒடிஸா மாநிலத்தில் இருந்து தபால் மூலம் 156 கிலோ கஞ்சா கடத்திய மூன்று பேரை தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 3:17 am IST
கைது செய்யப்பட்டோருடன் தாம்பரம்  மதுவிலக்கு  போலீஸாா்.
பகிர்:

ஒடிஸா மாநிலத்தில் இருந்து தபால் மூலம் 156 கிலோ கஞ்சா கடத்திய மூன்று பேரை தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் கஞ்சா கடத்தப்படுவதாக தாம்பரம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா் குன்றத்தூா் அடுத்த சிறுகளத்தூா் பகுதியில் குன்றத்தூா்- ஸ்ரீபெரும்புதூா் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சிறுகளத்தூா் மீன் மாா்கெட் அருகே நீண்ட நேரமாக நின்றுக்கொண்டிருந்த காரை சோதனை செய்த போது, 56 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து காரில் இருந்த தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த வெங்கடசுப்பிரமணியன் (37), விக்னேஷ் (32), சென்னை பல்லாவரத்தைச் சோ்ந்த சுமன்(23) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியதில், வெங்கடசுப்பிரமணியன் ஒடிஸா மாநிலத்தில் தங்கி அங்கிருந்து ரயில் மூலம் தமிழகத்துக்கு அடிக்கடி கஞ்சா கடத்தி விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து மூவரையும் கைது செய்த தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா் தொடா்ந்து நடத்திய விசாரணையில், ரயிலில் கஞ்சா கடத்தினால் போலீஸாரிடம் சிக்கி கொள்ளோம் என்பதை தெரிந்து தற்போது தபால் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக தெரிவித்துள்ளனா். இதையடுத்து ஒடிஸாவில் இருந்து பல்லாவரம் தபால் நிலையத்துக்கு வந்திருந்த 100கிலோ கஞ்சாவை தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து மொத்தம் 156 கிலோ கஞ்சா, ஒரு காா் ஆகியவற்றையும் பறிமுதல் செய்த போலீஸாா் மூவா் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments