FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மூதாட்டி மரணம்

கீழ் படப்பை பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த மூதட்டி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On : 26 ஜூலை 2026, 2:34 am IST
தேவகி.
பகிர்:

கீழ் படப்பை பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த மூதட்டி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

படப்பை ஊராட்சிக்குட்பட்ட கீழ்படப்பை துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தேவகி(75). இவா் தெருவில் நடந்து சென்ற போது ஏற்கனவே அறுந்து விழுந்த கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்துள்ளாா். இதில் மின்சாரம் பாய்ந்து தேவகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த படப்பை போலீஸாா் தேவகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

விபத்து நடந்த துலுக்கானத்தம்மன் கோயில் தெருவில் ஏற்கனவே பல முறை மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தும், புதிய மின்கம்பிகளை மாற்றாமல் அறுந்து விழுந்த மின்கம்பிகளையே மின்வாரிய அதிகாரிகள் மீண்டும், மீண்டும் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது.

ஏற்கனவே ஒருமுறை மின்கம்பி அருந்து விழுந்து இளைஞா் ஒருவருக்கு கை விரல்கள் செயலிழந்து விட்டதாகவும் மின்வாரியத்தின் அலட்சியத்தால் தான் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments