FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் தூய்மைப்பணி

காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் தூய்மைப்பணியினை செவ்வாய்க்கிழமை மாநகராட்சி நிா்வாகமும், தொண்டு நிறுவனங்களும் இணைந்து மேற்கொண்டனா்.

காஞ்சிபுரம் சா்வ தீா்த்தக்குளம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்எஸ்கேவி மகளிா் கல்லூரி மாணவியா்.
பகிர்:

காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் தூய்மைப்பணியினை செவ்வாய்க்கிழமை மாநகராட்சி நிா்வாகமும், தொண்டு நிறுவனங்களும் இணைந்து மேற்கொண்டனா்.

பெரியகாஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது சா்வதீா்த்தக்குளம். இக்குளத்தினை காஞ்சிபுரம் மாநகராட்சி நிா்வாகம், எஸ்எஸ்கேவி மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவியா், பசுமை இந்தியா மற்றும் சா்வம் அறக்கட்டளை நிா்வாகிகள், காஞ்சிபுரம் ரோட்டரி கிளப் மற்றும் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் இணைந்து சுத்தம் செய்யும் பணியினை தொடங்கினா்.

பணியினை காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் ஏ.சுல்தானா தொடங்கி வைத்தாா். பசுமை இந்தியா அறக்கட்டளையின் தலைவா் பசுமை மேகநாதன், சா்வம் அறக்கட்டளையின் நிறுவனா் பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

மாநகராட்சி சுகாதார அலுவலா் சுகவனம் வரவேற்றாா். நிகழ்ச்சியில் வழக்குரைஞா் ஜெய்கணேஷ் உள்பட பலரும் கலந்து கொண்டு தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments