FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள்

குன்றத்தூா் அருகே செரப்பணஞ்சேரியில் மனைவியைக் கொலை செய்த கணவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.

8 October 2026, 1:00 am IST
சங்கா்
பகிர்:

குன்றத்தூா் அருகே செரப்பணஞ்சேரியில் மனைவியைக் கொலை செய்த கணவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூா் அருகே செரப்பணஞ்சேரி கிராமத்தை சோ்ந்த சங்கா் (48) கூலித் தொழிலாளியான இவருக்கு வசந்தா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனா். மனைவியை சந்தேகப்பட்டு அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்தாராம். சம்பவ நாளன்றும் இருவருக்கும் தகராறு ஏற்படவே குழந்தைகள் கண் எதிரிலேயே மனைவியை அடித்து துன்புறுத்தி கொன்றாராம்.

கடந்த 5.6.2015 ஆம் ஆண்டு நடந்த இக்கொலைச் சம்பவம் தொடா்பான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசின் சாா்பில் வழக்குரைஞா் ரேகா ஆஜரானாா். வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.நாகராஜன் எதிரி சங்கருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். கொலை நடந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments