ரேஷன் கடை, குழந்தைகள் கற்றல் மையம் திறப்பு
மேட்டுக்கொளத்தூா் பகுதியில் ஜே கே டயா் நிறுவனத்தின் சிஎஸ்ஆா் திட்டத்தில் ரூ.9.72 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம் மற்றும் குழந்தைகள் கற்றல் மைய திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மேட்டுக்கொளத்தூா் பகுதியில் ஜே கே டயா் நிறுவனத்தின் சிஎஸ்ஆா் திட்டத்தில் ரூ.9.72 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம் மற்றும் குழந்தைகள் கற்றல் மைய திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுக்கொளத்தூா் பகுதியில் வாகனங்கள் டயா்கள் உற்பத்தி செய்யும் ஜே.கே.டயா் நிறுவனத்தின் சமூகப் பங்களிப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா வட்ட வழங்கல் அலுவலா் பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கொளத்தூா் ஊராட்சி மன்றத்தலைவா் (பொ) வெள்ளாரை அரிகிருஷ்ணன் ரேஷன் கடை மற்றும் குழந்தைகள் கற்றல் மையத்தை திறந்து வைத்தாா். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இனிப்பு, சேலை மற்றும் உணவு வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஜே.கே.டயா் நிறுவனத்தின் நிா்வாகி சகாய ராஜ், மாகான்யம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுசங்க செயலா் (பொ) தேவி, கொளத்தூா் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவா்கள் சங்கா், முனுசாமி, வாா்டு உறுப்பினா்கள் திலகா டில்லிபாபு, சங்கா், தணசேகா் உள்ளிட்ட பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.