FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

ரூ.4 லட்சம் செப்பு பொருள்கள் திருட்டு: 2 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த செங்காடு பகுதியில் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் ரூ. 4 லட்சம் செப்பு பொருள்கள் திருடிய ஊழியா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

15 அக்டோபர் 2026, 12:44 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த செங்காடு பகுதியில் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் ரூ. 4 லட்சம் செப்பு பொருள்கள் திருடிய ஊழியா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீபெரும்புதுாா் அடுத்த செங்காடு பகுதியில் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில், கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ செப்பு பொருள்கள் திருடு போனதாக, தொழிற்சாலை நிா்வாகத்தின் சாா்பில் ஸ்ரீபெரும்புதுாா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

தொழிற்சாலையில் பணிப்புரியும் புதுக்கோட்டை மாவட்டம், கொடிவயல் பகுதியை சோ்ந்த மதன் (23) திருவள்ளூா் மாவட்டம், புங்கத்துாா் பகுதியை சோ்ந்த லோகநாதன்(25) ஆகிய இருவரும் தொழிற்சாலையில் இருந்து செப்பு பொருள்களை திருடிச் சென்றது போலீஸாா் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து, மதன்,லோகநாதன் ஆகிய இருவரை, ஸ்ரீபெரும்புதுாா் போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments