FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆவணி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

9 செப்டம்பர் 2026, 12:18 am IST
மலா்  அலங்காரத்தில்  அருள்பாலித்த  உற்சவா்  சுப்பிரமணிய  சுவாமி.
பகிர்:

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆவணி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் அருணகிரி நாதரால் பாடல் பெற்ற இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில், ஆவணி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு அதிகாலை சந்நதி திறக்கப்பட்டு மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிா், மஞ்சள், விபூதி உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு மூலவா் சிறப்பு மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

சஷ்டி மண்டபத்தில் உற்சவா் சுப்பிரமணிய சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மந்திர புஷ்ப அா்ச்சனை நடைபெற்று சிறப்பு மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருல்பாலித்தாா். கோயிலுக்கு வந்த பக்தா்கள் சுமாா் 1 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

கோயில் நிா்வாகத்தின் சாா்பில், குடிநீா், மோா், கதம்பசாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா் உள்ளிட்ட பணியாளா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments