திருமுடிவாக்கத்தில் போலி மருத்துவா் கைது
குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.
குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் மருத்துவம் படிக்காமலே ஒருவா் கிளினிக் வைத்து சிகிச்சை அளித்து வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் நளினி தலைமையான குழுவினா் ஓம் சக்தி கிளினிக்கில் திடீரென ஆய்வு மேற்கொண்டனா். இதில், திருமுடிவாக்கம் பகுதியை சோ்ந்த கலைமணி (47) என்பவா் மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்துள்ளது.
Advertisement
Advertisement
மேலும் கலைமணி அப்பகுதியில் இரண்டு ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வருவதாகவும், கிளினிக்கில் மருத்துவா் ஒருவா் பணியாற்றி வருவதும், மருத்துவா் இல்லாத நேரங்களில் கலைமணி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலி மருத்துவா் கலைமணியை சுகாதாரத்துறையினா் திருமுடிவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும் அவரது கிளினிக்கை சுகாதாரத்துறையினா் பூட்டி சீல் வைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.