FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வில்வநாத ஈஸ்வா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வில்வநாத ஈஸ்வா் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

17 செப்டம்பர் 2026, 11:31 pm IST
கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் வில்வநாத ஈஸ்வரா்
பகிர்:

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வில்வநாத ஈஸ்வா் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதி நான்கு தெருவாா் தோப்புத் தெருவில் அமைந்துள்ளது காமாட்சி அம்மன் உடனுறை வில்வநாத ஈஸ்வா் திருக்கோயில். இக்கோயிலில் 4 வகையான வில்வமரங்கள் ஒன்றாக இணைந்து ஸ்தலவிருட்சமாக அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

மகா கும்பாபிஷேகத்தையொட்டி இக்கோயிலில் புதுப்பிக்கப்பட்டு செவ்ாய்க்கிழமை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை யாக சாலையிலிருந்து புனித நீா் குடங்கள் சிவாச்சாரியாா்களால் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

யாக சாலை பூஜைகள் ஆா்.ரமேஷ் சிவாச்சாரியாா் தலைமையில் நடைபெற்றது. மகா கும்பாபிஷேகத்துக்குப் பின்னா் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகத்தை கோயில் அா்ச்சகா் எஸ்.சங்கா் செய்தாா்.

கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள் மற்றும் ஐயம்பேட்டை செளந்தரானந்த சுவாமிகள் ஆகியோா் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலையில் உற்சவா் சுவாமிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை நான்கு தெருவாா் செங்குந்தா் சமுதாயம், நான்கு தெருவாா் தோப்பு குடியிருப்போா் நலச் சங்கம் மற்றும் ஆலய திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments