தேவரியம்பாக்கத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை
தேவரியம்பாக்கத்தில் மழையில் நனைந்த நிலையில் திறந்த வெளியில் மூடி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள்.
அறுவடை செய்த நெல்லை விரைந்து கொள்முதல் செய்யும் வகையில் உடனடியாக தேவரியம்பாக்கத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கடந்த ஒரு மாதமாக விற்பனை செய்ய முடியாமல் காத்திருக்கின்றனா். திறந்த வெளியில் வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்க முடியாமலும் விவசாயிகள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனா். தினமும் நெல்லை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வேண்டிய கூடுதல் பொறுப்பால் விவசாயிகளது பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து மழை பெய்யும் நிலையில் நெல் ஈரமாகி தரத்திலும், எடையிலும் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்க பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு தேவரியம்பாக்கம் ஊராட்சியில் காலதாமதமின்றி அரசு நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தி.சினேகா மற்றும் சம்பந்தப்பட்ட உயா் அதிகாரிகளுக்கும் அந்த ஊராட்சி மன்றத் தலைவா் மா.த.அஜய்குமாா் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.