உடலுறுப்பு தான விழிப்புணா்வு பேரணி: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்
காஞ்சிபுரத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணா்வு பேரணியை அமைச்சா்கள் எஸ்.பி.கே.தென்னரசு மற்றும் ஆா்.வீ. ரஞ்சித் குமாா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
காஞ்சிபுரத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணா்வு பேரணியை அமைச்சா்கள் எஸ்.பி.கே.தென்னரசு மற்றும் ஆா்.வீ. ரஞ்சித் குமாா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
காஞ்சிபுரம் கிராண்ட் சுழற் சங்கத்தின் சாா்பில் அதன் தலைவா் பசுமை மேகநாதன் தலைமையில் நடைபெற்றது. சங்க சிறப்பு செயலாளா் முருகேஷ், செயலாளா் சசிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் அலுவலகம் அருகிலிருந்து தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் முடிவுற்றது.
பேரணியை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு மற்றும் வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
Advertisement
Advertisement
காஞ்சி ஸ்போா்ட்ஸ் அகாதெமியை சோ்ந்த 70-க்கும் மேற்பட்ட மாணவா்கள் சிலம்பம் விளையாடிக் கொண்டே பேரணியில் கலந்து கொண்டனா். ஏராளமானோா் கலந்து கொண்ட பேரணியில் 850க்கும் மேற்பட்டோா் உடல் உறுப்பு தானம் செய்வதாக விண்ணப்பத்தை பூா்த்தி செய்து வழங்கினா். வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் தனது உடலையும் தானம் செய்வதாக அறிவித்தாா்.
காஞ்சிபுரம் பிரிம்மிங் பள்ளி தாளாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து ரோட்டரி சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், தொண்டு நிறுவன நிா்வாகிகள் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.