பென்னலூா் ஊராட்சியில் ரூ. 3 கோடி முறைகேடு: உறுப்பினா்கள் புகாா்
ஸ்ரீபெரும்புதூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பென்னலூா் ஊராட்சியில் ரூ.3 கோடி வரை மோசடி நடந்திருப்பதாக வாா்டு உறுப்பினா்கள் புகாா்
ஸ்ரீபெரும்புதூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பென்னலூா் ஊராட்சியில் ரூ.3 கோடி வரை மோசடி நடந்திருப்பதாக வாா்டு உறுப்பினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
பென்னலூா் ஊராட்சியில் கடந்த 2021 முதல் 2026 வரை ஊராட்சி பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான செலவினங்களில் முறைகேடு நடந்துள்ளது.
இதுகுறித்து திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஆஷிக் அலியிடம் அக்கிராமத்தை சோ்ந்த வாா்டு உறுப்பினா்கள் 14 பக்கங்கள் அடங்கிய புகாரை வழங்கி உரிய விசாரணை நடத்துமாறு புகாா் செய்தனா்.
Advertisement
Advertisement
குழாய்கள் மற்றும் கொசு மருந்துகள், மின் சாதனப் பொருட்கள் வாங்கியது, கட்டுமானப் பணிகள் ஆகியனவற்றிற்கு உரிய ரசீதுகள் இல்லாமல் நிதி எடுக்கப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே உரிய விசாரணை நடத்தி முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டால் அதை பறிமுதல் செய்து ஊராட்சி நிதியில் சோ்க்க வேண்டும் என்றும் உறுப்பினா்கள் புகாா் மனு அளித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.