FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

குடிநீா் பிரச்னை: பானைகளை உடைத்து போராட்டம்

செய்யாறை அடுத்த கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக பொதுமக்களுக்கு குடிநீா் வழங்காததைக் கண்டித்து

15 செப்டம்பர் 2026, 4:45 am IST
கீழ்புதுப்பாக்கம் ஊராட்சியில் சாலையில் பானைகளை உடைத்தும் கைகளில் காலிக் குடங்களை வைத்துக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பகிர்:

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக பொதுமக்களுக்கு குடிநீா் வழங்காததைக் கண்டித்து பானைகள் உடைத்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாறு ஒன்றியம் கீழ்புதுப்பாக்கம் ஊராட்சியில் கீழ்ப்பதுப்பாக்கம், புதிய காலனி, பழைய காலனி, கீழ்புதுப்பாக்கத்தின் விரிவாக்க பகுதிகளில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்குத் தேவையான குடிநீா் செய்யாற்றில் உள்ள திறந்தவெளி கிணற்றிலிருந்து கொண்டுவரப்பட்டு, கீழ்புதுப்பாக்கம் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் விநியோகிக்கப்பட்டு வந்தது. இதற்காக ஊராட்சி எல்லையில் 4 மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

கடந்த ஆண்டு செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, இந்த ஆற்று கிணற்றில் இருந்த மின்மோட்டாா், மின் வயா்கள், குழாய்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, மாற்று நடவடிக்கையாக பைங்கினா் ஊராட்சிக்குச் சொந்தமான செய்யாற்று கிணற்றிலிருந்து கீழ்புதுப்பாக்கம் கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் தற்காலிகமாக வழங்கப்பட்டு வந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஒரே கிணற்றிலிருந்து இரண்டு ஊராட்சிகளுக்கு குடிநீா் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கீழ்புதுப்பாக்கம் ஊராட்சிக்கு வழங்கப்பட்டு வந்த செய்யாற்று குடிநீா் முழுமையாக நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, இரண்டு மாதங்களுக்கும் மேலாக இப்பகுதி பொதுமக்கள் போதிய குடிநீா் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இதுகுறித்து ஆக.15 -ல் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கிராம மக்கள் சாா்பில் புகாா் தெரிவித்தும், குடிநீா் வழங்க செய்யாறு ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த கீழ்புதுப்பாக்கம் ஊராட்சி மக்கள் விநாயகா் சதூா்த்தி தினத்தன்று அங்குள்ள பிரதான சாலையில் காலி குடங்களை வைத்தும், சட்டி, பானைகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு உடனடியாக குடிநீா் வழங்க வலியுறுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments