FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட முகாம்

காஞ்சிபுரம் மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் தூய்மைப்பணியாளா்களின் சேவையை பாராட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் ஏ.சுல்தானா
பகிர்:

காஞ்சிபுரம் மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் தூய்மைப்பணியாளா்களின் சேவையை பாராட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே பல்லவன் நகா் பகுதியில் தூய்மைப் பணியாளா்களுக்கான நலத்திட்ட முகாம் நடைபெற்றது. ஆணையா் ஏ.சுல்தானா முகாமை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா். முகாமிற்கு மாநகராட்சி சுகாதார அலுவலா்கள் சுகவனம் மற்றும் ரேவதி ஆககியோா் முன்னிலை வகித்தனா்.

தூய்மைப்பணியாளா்களின் சமூகப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், திறன் மேம்பாடு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பாட்டு திட்டம், நிதிச் சேவைகள் உள்ளிட்ட அனைத்தும் அவா்களை சென்று சேருவதற்கு தேவையான அரசு நிறுவனங்கள் வரவழைக்கப்பட்டு தேவைப்படும் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

முகாமில் நிரந்தர, ஓப்பந்த மற்றும் தனியாா் கழிவுநீா் வாகன பணியாளா்கள், கழிவு நீா் தொட்டி வடிகால் பணிகள், சுத்திகரிப்பு நிலைய பணியாளா்கள் மற்றும் அவா்களை சோ்ந்த குடும்ப உறுப்பினா்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டவா்களுக்கு நலத்திட்ட முகாமில் உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் மாமன்ற உறுப்பினா்கள், சுகாதார ஆய்வாளா்கள், மாநகராட்சி பணியாளா்கள் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments