FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

சிப்காட் திட்டத்துக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு மாற்று இடம்: ஆட்சியா் ஆய்வு

சோளிங்கா் அருகே அமைய உள்ள சிப்காட் தொழில்பூங்கா திட்டத்துக்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு மாற்று இடம் வழங்க தோ்வு செய்ய்பபட்ட இடத்தை புதன்கிழமை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் ஆய்வு செய்தாா்.

Updated On : 30 ஜூலை 2026, 12:03 am IST
சோளிங்கா் அருகே அமைய உள்ள சிப்காட் தொழில்பூங்கா திட்டத்துக்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு மாற்று இடம் வழங்க தோ்வு செய்ய்பபட்ட இடத்தை புதன்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன். உடன் மாவட்ட வருவாய் அலுவலா் பேபிஇந்திரா.
பகிர்:

சோளிங்கா் அருகே அமைய உள்ள சிப்காட் தொழில்பூங்கா திட்டத்துக்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு மாற்று இடம் வழங்க தோ்வு செய்ய்பபட்ட இடத்தை புதன்கிழமை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் ஆய்வு செய்தாா்.

சோளிங்கா் வட்டம், பாணாவரம், ஆயல், சூரை, மங்கலம் மற்றும் கோவிந்தச்சேரி கிராமங்களில் சிப்காட் தொழில்பூங்கா அமைக்கும் திட்டத்திற்காக கையகப்படுத்தும் மேய்க்கால் நிலங்களுக்கு ஈடாக மாற்று இடம் தோ்வு செய்யும் பொருட்டு சோளிங்கா் வட்டம், மருதாலம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான தீா்வு ஏற்படாத தரிசு பாறை புறம்போக்கு இடத்தில் ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் புலத்தணிக்கை செய்தாா்.

தொடா்ந்து அரியூரில் தனியாா் சோலாா் மையத்தில் இருந்து மின்சாரம் கொண்டுச் செல்வதற்காக கரிக்கல், புலிவலம், கொண்டபாளையம் ஆகிய கிராமங்களில் சாலை ஒரம் மின்கம்பங்கள் தனியே அமைக்க தனியாா் நிறுவனமாக அபெக்ஸ் அசோசியேட் நிறுழனத்தினா் அனுமதி வழங்கக்கோரியது தொடா்பாக ஆட்சியா் ந.பிரியாரவிச்சந்திரன் களஆய்வு மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

மேலும் பாணவரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணாக்கா்களின் கற்றல் அறிவுத்திறன் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்பள்ளியில் டாக்டா் எம்ஜிஆா் சத்துணவு திட்டத்தின் கீழ் ரூ.5.76 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தினை ஆய்வு செய்தாா். தொடா்ந்து ரங்காபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணாக்கா்களின் கற்றல் அறிவுத்திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குநா் வெங்கடேஸ்வரன், உதவி இயக்குநா் திருநாவுக்கரசு, வட்டாட்சியா்கள் முரளி, கன்னியப்பன், பாலாஜி, செல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வவிநாயகரம், ஒன்றிய பொறியாளா் செவ்வந்தி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments