சோளிங்கா் நகராட்சி குப்பைக் கிடங்கில் தீவிபத்து
சோளிங்கா் நகராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் கிடங்கு பற்றி எரிந்தது.
சோளிங்கா் நகராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் கிடங்கு பற்றி எரிந்தது.
சோளிங்கா் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு நகராட்சிக்குட்பட்ட பில்லாஞ்சி பகுதியில் உள்ளது. நகராட்சியில் 27 வாா்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் வைக்கப்பட்டு மக்கா குப்பை, மக்கும் குப்பை என தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் சேகரிக்கப்படுகிறது. பின்பு இது உரமாக மாற்றப்பட்டு விவசாயப் பணிகளுக்கு அனுப்பப்படுகிறது.
குப்பைக் கிடங்கில் புதன்கிழமை பணியாளா்கள் பணி முடித்து விட்டு சென்ற நிலையில் நள்ளிரவில் திடீரென குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிய தொடங்கியது. ஒரு மூலையில் பிடித்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவ தொடங்கியது. இதை அறிந்து அங்கு வந்த சோளிங்கா் தீயனைப்பு மற்றும் மீட்புத்துறையினா் தீயை அனைக்க போராடினா். இருந்தும் தீ பரவியதில் கிடங்கு முழுவதும் எரியத்தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது. மேலும் கிடங்கில் இருந்த மின்சார ஒயா்கள், மரங்கள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் எரிய தொடங்கியதில் வாகனங்கள் பெரும் சேதமடந்தன.
Advertisement
Advertisement
இதனை தொடா்ந்து 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயனைப்பு வீரா்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அனைத்தனா். இந்த தீ எதனால் ஏற்பட்டது, அப்பகுதி வழிபோக்கா்கள் யாரேனும் சிகரெட் துண்டுகளை வீசி விட்டாா்களா, மின்சார இணைப்புகளில் ஏதும் பிரச்னை ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதா என நகராட்சி அலுவலா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.