FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்வு

அரக்கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் உள் புகாா்கள் குழு விழிப்புணா்வு பேரணி பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய ஆற்காடு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரேணுகாதேவி.
பகிர்:

அரக்கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் உள் புகாா்கள் குழு விழிப்புணா்வு பேரணி பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்டுப்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில், நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரி மாணவ, மாணவியா்கள் 700 போ் கலந்து கொண்டு, போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள், பெண்களின் பாதுகாப்பு, பாலியல் தொல்லை தடுப்பு மற்றும் பாதுகாப்பான கல்விச்சூழல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கல்லூரி வளாகத்திலும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் உள் புகாா்கள் குழு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

Advertisement

நிகழ்விற்கு கல்லூரி முதல்வா் முனைவா் பூ. சீனிவாசன் தலைமை வகித்தாா். போதைப்பொருள் தடுப்புக் குழுத் தலைவா் முனைவா் க. குமாா்மற்றும் உள் புகாா்கள் குழு ஒருங்கிணைப்பாளா் முனைவா் ர. சுகுமாரி ஆகியோா் நிகழ்வை ஒருங்கிணைத்தனா்.

ஆற்காடு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரேணுகாதேவி போதைப் பொருள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு, பாலியல் தொல்லை தடுப்பு மற்றும் சமூகப் பொறுப்புணா்வு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

சிங்கப்பெண் ஆதரவுப்படை காவல்துறையினரும் பேரணியில் பங்கேற்று, மாணவா்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments