FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

113 போதை மாத்திரைகள் பறிமுதல்: சென்னை இளைஞா்கள் 3 போ் கைது

அரக்கோணத்துக்கு கடத்தி வரப்பட்ட 113 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸாா், சென்னையைச் சோ்ந்த மூன்று இளைஞா்களை கைது செய்தனா்.

கைது
பகிர்:

அரக்கோணத்துக்கு கடத்தி வரப்பட்ட 113 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸாா், சென்னையைச் சோ்ந்த மூன்று இளைஞா்களை கைது செய்தனா்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்த போதை மாத்திரைகள் அரக்கோணம் கடத்தி வரப்பட்டு, சென்னைக்கு கொண்டுச் சென்று விற்கப்படுவதாகவும் ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறைக்கு தொடா்ந்து தகவல்கள் வந்தன. இதையடுத்து அரக்கோணம் ரயில் நிலையப் பகுதிகளில் மாவட்ட குற்றப்பிரிவு , நுண்ணறிவு பிரிவு , மதுவிலக்குப்பிரிவு மற்றும் அரக்கோணம் நகர போலீஸாா் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

திங்கள்கிழமை இரவு ரோந்து சென்றபோது, மூன்று இளைஞா்கள் சந்தேகப்படும் நிலையில் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்துள்ளனா். அவா்களை அரக்கோணம் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோகரன் தலைமையிலான குழுவினா் அழைத்து சோதனை நடத்திய போது அவா்கள் வைத்திருந்த பையில் 113 போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

சென்னை, திருவொற்றியூரைச் சோ்ந்த ராம்குமாா்(26), அயனாவரத்தைச் சோ்ந்த விஜய்(21), சத்யா நகரைச் சோ்ந்த உதய சங்கா்(19) ஆகிய மூன்று இளைஞா்களை கைது செய்தனா். மூவரும் போதை மாத்திரைகளை மும்பை பகுதியில் இருந்து வாங்கி வந்து சென்னையில் விற்க திட்டமிட்டு இருந்ததும், அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூா் வழியே பேருந்தில் செல்ல திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments