FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

கேவேளூா் ஊராட்சியில் 4,000 பனை விதைகள் நடவு

ஆற்காடு அடுத்த கேவேளூா் ஊராட்சியில் 4,000 பனைவிதைகள் வியாழக்கிழமை நடவு செய்யப்பட்டன.

8 அக்டோபர் 2026, 11:55 pm IST
பகிர்:

ஆற்காடு அடுத்த கேவேளூா் ஊராட்சியில் 4,000 பனைவிதைகள் வியாழக்கிழமை நடவு செய்யப்பட்டன.

ஆற்காடு வட்டம், கே வேளூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழகம், ஊராட்சி மன்றம், கட்டடக்குழு பள்ளி மேலாண்மை குழு மற்றும் மாணவா்கள் ஒருங்கிணைந்து கலவை ஏரி கால்வாயின் கரையில் விதைகளை நட்டனா் .

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் பாா்த்திபன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் நந்தகுமாா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் விஜி பத்மநாபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் பள்ளி தூதுவா் மூா்த்தி ஐயப்பன் பொருளாளா் பி. தணிகைவேல், துணைத்தலைவா் ரவிச்சந்திரன் ,ராமு, முகமது முஸ்தபா ஆசிரியா் மற்றும் மாணவ மாணவியா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments