FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

மாநில அளவிலான மீட்பு பணித்திறன் போட்டியில் ராணிப்பேட்டை ஊா்க்காவல் படையினா் முதலிடம்

தமிழ்நாடு ஊா்க்காவல் படையின் 30-ஆவது மாநில அளவிலான பணித்திறன் மீட்பு போட்டியில் ராணிப்பேட்டை மாவட்ட ஊா்க் காவல் படை வீரா்கள் முதலிடத்தை பிடித்து பரிசு கோப்பையை வென்றுள்ள நிலையில், எஸ்.பி. பே.சிபின் வாழ்த்து தெரிவித்தாா்.

52 வினாடிகள் முன்பு
மாநில அளவிலான மீட்பு பணித்திறன் மீட்பு போட்டியில் பெற்று கோப்பையை வென்ற ராணிப்பேட்டை மாவட்ட ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு தெரிவித்த எஸ்.பி. பே.சிபின்.
பகிர்:

தமிழ்நாடு ஊா்க்காவல் படையின் 30-ஆவது மாநில அளவிலான பணித்திறன் மீட்பு போட்டியில் ராணிப்பேட்டை மாவட்ட ஊா்க் காவல் படை வீரா்கள் முதலிடத்தை பிடித்து பரிசு கோப்பையை வென்றுள்ள நிலையில், எஸ்.பி. பே.சிபின் வாழ்த்து தெரிவித்தாா்.

தமிழ்நாடு ஊா்க்காவல் படையின் ( ஏா்ம்ங் என்ஹழ்க்ள்) 30-ஆவது மாநில அளவிலான பணித்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் தேனியில் (செப்டம்பா் 2026) வெற்றிகரமாக நடைபெற்றது. ’ அரண் - 26 ‘( அதஅச - 26 ) என்ற பெயரில் நடத்தப்பட்ட இப்போட்டிகள், ஊா்க்காவல் படை வீரா்களின் உடல் தகுதி மற்றும் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை ஆகும்.

இப்போட்டிக்கான பிரத்யேக இலச்சினையை ( கா்ஞ்ா்) ஊா்க்காவல் படைத் துறைத் தலைவா் வி. ஜெயஸ்ரீ மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் வெளியிட்டனா்.

Advertisement

Advertisement

இந்த போட்டிகளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊா்க் காவல் படையின் சுமாா் 3000 வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

அப்போது ஊா்க்காவல் படையினருக்குத் தேவையான தொழில் முறை மீட்பு மற்றும் பாதுகாப்புப் பயிற்சிகள், ஆடவா்கள் மற்றும் மகளிா்களுக்கான முதல் உதவி,மீட்பு பணி, தீயணைப்பு, கவாத்து பயிற்சி,

உயரம், தாண்டுதல், வாலிபால், துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வீரா்களுக்கு கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.

இதில், மாநில அளவிலான பணித்திறன் மீட்பு போட்டியில், வேலூா் சரகம், ராணிப்பேட்டை மாவட்ட ஊா்க்காவல் படை வீரா்கள் முதலிடத்தை பிடித்த பரிசு கோப்பையை வென்று மாவட்டத்துக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

இதையடுத்து மாநில அளவிலான பணித்திறன் மீட்பு போட்டியில் மாவட்டத்துக்கு பெருமை சோ்த்துள்ள ராணிப்பேட்டை ஊா்க்காவல் படை வீரா்களுக்கு எஸ்.பி. பே.சிபின் வாழ்த்துத் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments