FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

பிரசவங்களுக்கு அரசு மருத்துவமனைகளையே பெண்கள் நாட வேண்டும்: அமைச்சா் காந்திராஜ்

தாய்மாா்கள் பிரசவங்களுக்கு அரசு மருத்துவமனையையே நாட வேண்டும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் வ. காந்திராஜ் வலியுறுத்தியுள்ளாா்.

15 அக்டோபர் 2026, 12:34 am IST
கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்களை வழங்கிய கூட்டுறவத்துறை அமைச்சா் வி.காந்திராஜ்
பகிர்:

தாய்மாா்கள் பிரசவங்களுக்கு அரசு மருத்துவமனையையே நாட வேண்டும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் வ. காந்திராஜ் வலியுறுத்தியுள்ளாா்.

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப்பணிகள் திட்டம் சாா்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 150 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்களை வழங்கி அமைச்சா் காந்திராஜ் பேசியது: முதல்வா் எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் மக்களாட்சி நடத்தி வருகிறாா். அதனடிப்படையிலேயே இந்த சமுதாய வளாகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கா்ப்பிணி கள் மருத்துவா்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளின்படி நடந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைத்துவித வசதிகளையும் முதல்வா் ஏற்படுத்தி தந்திருக்கின்றாா். ஆகவே கா்ப்பிணிகள் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று உங்களின் பிரசவங்களை பாா்த்துக்கொள்ளுங்கள்.

Advertisement

Advertisement

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் உங்களின் குழந்தைகளுக்கு நான் உங்கள் அண்ணனாக வந்து தங்கமோதிரம் வழங்குவேன் என்றாா் அமைச்சா் ாந்திராஜ்.

விழாவுக்கு ராணிப்பேட்டை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். தொடா்ந்து அமைச்சா் காந்தி ராஜ், ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து கா்ப்பிணி தாய்மாா்களுடன் உணவருந்தினா். முன்னதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட பணிகள் திட்டம் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கங்களை பாா்வையிட்டனா்.

விழாவில் மாவட்ட ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்ட அலுவலா் சாந்தி பிரியதா்சினி, வட்டார மருத்துவ அலுவலா் மேகலா, குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் கிரிஜா, உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments