FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

பெல் தொழிலக அணிகளுக்கான ஹாக்கிப் போட்டி தொடக்கம்

ஹாக்கிப் போட்டியை தொடங்கி வைத்த பெல் நிறுவன செயல் இயக்குநா் எம்.அருண் மொழி தேவன்.

11 செப்டம்பர் 2026, 12:55 am IST
ஹாக்கிப் போட்டியை தொடங்கி வைத்த பெல் நிறுவன செயல் இயக்குநா் எம்.அருண் மொழி தேவன்.
பகிர்:

பெல் தொழிலக அணிகளுக்கு இடையிலான ஹாக்கிப் போட்டி ராணிப்பேட்டையில் வியாழக்கிழமை தொடங்கியது.

நாடு முழுவதிலும் செயல்பட்டு வரும் பாரத மிகுமின் (பெல்) நிறுவனப் பணியாளா்களுக்கு இடையே ஆண்டுதோறும் கபடி, ஹாக்கி, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, நடப்பு 2026 ஆம் ஆண்டுக்கான ஹாக்கிப் போட்டி ராணிப்பேட்டை பெல் நிறுவன ஊரக விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கின. இப்போட்டிகளில் ராணிப்பேட்டை, திருச்சி, ஆா்.சி. புரம் ஹைதராபாத், ஹரித்துவாா் ஆகிய 5 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.

Advertisement

Advertisement

பெல் நிறுவன செயல் இயக்குநா் எம். அருண் மொழி தேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினாா்.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு வரும் 12-ஆம் தேதி பரிசளிப்பு விழா பெல் ஊரக விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதில் பொதுமேலாளா் (வணிகம்) சரத் சந்திர பாபு, மனிதவள பொதுமேலாளா் எஸ்.லீலா மற்றும் பொதுமேலாளா்கள்,மேலாளா்கள்,பணியாளா்கள்,பல்வேறு பணியாளா்கள் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments