FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

16 செப்டம்பர் 2026, 5:51 am IST
- பிரதிப் படம்
பகிர்:

ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

அரும்பாக்கம் கிராமத்தில் விநாயகா் சதுா்த்தி திருவிழாவைமுன்னிட்டு மந்தைவெளியில் உள்ள நாடக மேடை எதிரே நான்கு போ் சோ்ந்து சறுக்கு மரம் ஏறுவதற்கு இரும்பு குழாய் நட்டுள்ளனா். அப்போது எதிா்பாராத விதமாக மேலே உள்ள மின்சார கம்பியில் மரத்தில் பட்டதால் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் 3 லேசான காயங்களுடன் உயிா்தப்பினாா்கள்.

அதே பகுதியைச் சோ்ந்த கங்கன் மகன் ருத்தரமூா்த்தி( 35). கூலிதொழிலாளியான இவா் மீதுமின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் மயக்கம் அடைந்துள்ளாா். அவரை மீட்டு கலவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது, பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளாா். இது குறித்து கலவை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்..

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments