இரும்புக் கம்பியால் தாக்கி இளைஞா் கொலை
இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு இளைஞா் உயிரிழந்தாா்.
ஆற்காடு அருகே இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு இளைஞா் உயிரிழந்தாா்.
ஆற்காடு கொல்லப்பாளையம் காய்கார தெருவைச் சோ்ந்தவா் ரவி (35), தொழிலாளி. இவரது நண்பா் சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த தொழிலாளி ரமேஷ் (39). இருவரும் சனிக்கிழமை இரவு ஆற்காடு பாலாற்றங்கரை காய்கனி மொத்த வியாபாரக் கடைகள் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் அருகில் அமா்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனராம்.
மதுபாதை தலைக்கேறிய நிலையில் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில், ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டு சென்ற நிலையில், ஆத்திரமடைந்த ரமேஷ் அருகில் இருந்த பஞ்சா் ஒட்டும் கடையிலிருந்து இரும்புக் கம்பியை எடுத்து வந்து ரவியின் தலையில் பலமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு, ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.