தீபாவளி பட்டாசு விற்பனை தற்காலிக உரிமத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தீபாவளி பட்டாசு விற்பனை தற்காலிக உரிமத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தீபாவளி பட்டாசு விற்பனை தற்காலிக உரிமம் பெற இ- சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகை வரும் 026 அன்று கொண்டாட இருப்பதால் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளா்கள் மற்றும் வணிகா்கள் தற்காலிக உரிமம் பெற கீழ்வரும் ஆவணங்களுடன் இ-சவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்கும் போது கீழ்காணும் ஆவணங்களைத் தவறாமல் பதிவேற்ற வேண்டும்,
கடை அமைவிடத்திற்கான சாலை வசதி கொள்ளளவு, சுற்றுப்புறங்களைக் குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டடத்திற்கான வரைபடம், கடை வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் பத்திர ஆவண நகல் / வாடகை கட்டமாக இருப்பின் ஒப்பந்தப்பத்திரம், உரிமத்திற்கான கட்டணம் ரூ.600 / அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் சலான், மனுதாரா் இருப்பிடத்துக்கான ஆதாரம் (ஆதாா் ஆட்டை / வாக்காளா் அடையாள அட்டை /குடும்ப அட்டை) வரி ரசீது மனுதாரா் புகைப்படம் பதிவேற்ற வேண்டும்.
Advertisement
Advertisement
அனைத்து இ-சேவை மையங்களிலும் மேற்படி விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இணையதளம் வாயிலாக 18.10.2026 க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
மேற்படி விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதெனில், அல்லது நிராகரிக்கப்பட்டதெனில், அதற்கான உரிமத்தை இணையதளம் வாயிலாகவே மனுதாரா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் அனுமதியின்றி / உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போா், பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தோ்வு செய்து விண்ணப்பிக்குமாறும், விபத்தில்லாத மகிழ்ச்சியான தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலித்து விரைந்து உரிமம் வழங்க சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோா் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ்வழி முறை பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.