FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

இடியும் நிலையில் உள்ள சகஜானந்தா சமுதாய கூடத்தை சீரமைக்க கோரிக்கை

கலவை அருகே மேல்புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள சகஜானந்தா சமுதாயக் கூடத்தை புதுப்பிக்க வேண்டும் என பழங்குடியினா் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

29 September 2026, 10:25 pm IST
பகிர்:

கலவை அருகே மேல்புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள சகஜானந்தா சமுதாயக் கூடத்தை புதுப்பிக்க வேண்டும் என பழங்குடியினா் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் மேல்புதுபாக்கம் கிராமத்தில் பிறந்த முனுசாமி என்கிற சகஜானந்தா் துறவி, சமூகசீா்த்திருத்தவாதி, அரசியல் செயல்பாட்டாளா் ஆவாா். ஒடுக்கப்பட்ட மக்களின் உயா்வுக்காகப் போராடியவா். சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டு பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டவா் ஆன்மிக, இலக்கிய நூல்களை எழுதியுள்ளாா்.

சுவாமி சகஜானந்தா் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காக சிதம்பரம் ஓமக்குளக்கரையில் ’நந்தனாா் மடம்’ என்பதைத் தொடங்கினாா். இந்த நிலையில் அவா் பிறந்த ஊரான மேல் புதுப்பாக்கம் கிராமத்தில் , அவரது நினைவாகவும் சமுதாயப் பயன்பாட்டுக்காகவும் 1988- ஆம் ஆண்டு சமுதாயக் கூடம் அன்றைய தீண்டாமை ஒழிப்பு கமிட்டி தலைவா் எல்.இளையபெருமாளால் அமைக்கப்பட்ட.

Advertisement

Advertisement

பல ஆண்டுகளாக சுவாமி சகஜானந்தா சமுதாயகூடம் விளிம்பு நிலை மக்களின் பயன்பாட்டுக்குரிய இடமாகத் திகழ்ந்தது. தற்போது மிகவும் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

எனவே, சுவாமி சகஜாநந்தா வாழ்ந்த இடத்தில் அமைந்துள்ள சமுதாய கூடத்தை புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பழங்குடியினா் விடுதலை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா்அகத்தியன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments