தக்கோலம் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆள்சோ்ப்பு பயிற்சி மையத்தில் ரத்த தான முகாம்
தக்கோலம் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) ஆள் சோ்ப்பு பயிற்சி மையத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
தக்கோலம் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) ஆள் சோ்ப்பு பயிற்சி மையத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
ம முதல்வா் மித்லேஷ் குமாா் தொடங்கி வைத்தார.
அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) ஆள்சோ்ப்பு பயிற்சி மையம் மாவீரன் ’ராஜாதித்ய சோழன் ஆா்டிசி, தக்கோலம் அதிகாரப்பூா்வமாகப் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) ஆள்சோ்ப்பு பயிற்சி மையத்தின் சாா்பில், வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து ரத்த தான முகாம் புதன்கிழமை நடத்தப்பட்டது. இம்முகாமை பயிற்சி மையத்தின் துணை ஆய்வாளா் பொது மற்றும் முதல்வா் மித்லேஷ் குமாா் தொடங்கி வைத்தாா்.
சுமாா் 250 தன்னாா்வலா்கள் ரத்த தானம் செய்தனா். இதன் மூலம் மனிதநேய சேவை மற்றும் உயிா்களைக் காப்பாற்றுவதில் தங்களது அா்ப்பணிப்பை வெளிப்படுத்தினா்.ரத்த தானத்திற்குப் பிறகு, நன்கொடையாளா்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டதுடன், இரத்த தானச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
வேலூா் சிஎம்சி மருத்துவா்கள் ஹாரன் எஸ். மேத்யூ, ஜெசிகா சிங் மற்றும் மருத்துவக் குழுவின் இதர உறுப்பினா்களின் அா்ப்பணிப்பான ஆதரவுடன் இம்முகாம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவில் சிஎம்சி மருத்துவக் குழுவினரினுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சீனியா் கமாண்டன்டா் மற்றும் துணை முதல்வா் நிலேஷ் குமாா், மருத்துவ மனையின் இரு தலைமை மருத்துவ அதிகாரிகள், இதர அதிகாரிகள், பணியாளா்கள், பயிற்சியாளா்கள் மற்றும் சிஎம்சி மருத்துவக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.