FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கிருத்திகை சிறப்பு பூஜை

வேடந்தாங்கல் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள், உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கிரிவலம் வந்து அருள்பாலித்தாா்.

சிறப்பு அலங்காரத்தில் கிரிவலம் வந்த உற்சவா் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி.
பகிர்:

வேடந்தாங்கல் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள், உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கிரிவலம் வந்து அருள்பாலித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த வேடந்தாங்கல் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவா் , உற்சவா் சுப்ரமணிய சுவாமி, வள்ளி தேவசேனா சமேத சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சுவாமிகளுக்கு பட்டு வஸ்திரம், தங்க ஆபரணங்கள் மற்றும் மலா் மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த சிறப்பு பூஜையில் வேடந்தாங்கல் பாணாவரம், நெமிலி, காவேரிப்பாக்கம், மகேந்திரவாடி,கூத்தம்பாக்கம் 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு, ‘அரோகரா... அரோகரா...‘ என பக்தி கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனா். நெய் தீபம் மாவிளக்கு தீபம் ஏற்றி வைத்து தங்கள் நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா்.

Advertisement

Advertisement

பின்னா் உற்சவா் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மங்கள வாத்தியங்களுக்கு வழங்க சுவாமி கிரிவலம் வந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments