FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

கஞ்சா வியாபாரி குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

ஆந்திராவை சோ்ந்த கஞ்சா வியாபாரி குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 5:01 am IST
கைது
பகிர்:

ஆந்திராவை சோ்ந்த கஞ்சா வியாபாரி குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

நாட்டறம்பள்ளி காவல்ஆய்வாளா் மூா்த்தி தலைமையில் போலீஸாா் கடந்த மாதம் 6ஆம் தேதி பச்சூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அரசு கலைக் கல்லூரி அருகே பைக்கில் வந்தவரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலம் குப்பம் வாணக்குட்டப்ள்ளி பகுதியைச் சோ்ந்த கணபதி(42) என்பதும் இவா் சில மாதங்களாக ஆந்திரத்தில் இருந்து பைக்கில் கஞ்சா கடத்தி வந்து கொத்தூா், பச்சூா், நாட்டறம்பள்ளி பகுதிகளில் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து தொடா் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட கணபதியை குண்டா் சட்டத்தில் கைது செய்ய திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து கணபதியை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் கு.ரவிகுமாா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து சனிக்கிழமை கணபதியை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments