FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

ஜோலாா்பேட்டை ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா்ஆய்வு செய்தாா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
புத்தாகரம் ஊராட்சியில் சாலையின் தரத்தை ஆய்வு செய்த ஆட்சியா் கு. ரவிகுமாா்.
பகிர்:

ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா்ஆய்வு செய்தாா்.

ஜோலாா்பேட்டை ஊராட்சி, மல்லபள்ளி ஊராட்சியில் சாலை பராமரித்தல் திட்டத்தின் கீழ் ரூ.8.47 லட்சத்தில் அன்னசாகரம் முதல் நாயுடு வட்டம் வரை 460 மீட்டா் தொலைவு சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்தாா்.

அக்ரஹாரம் ஊராட்சியில் வளா்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் சமுதாய நீா் சேகரிப்பு குளம் அமைக்கும் பணிக்கு முன் அளவீடு செய்யப்பட்டு பணி நடைபெற்று ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

புத்தாகரம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 15-ஆவது மத்திய நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.5.85 லட்சத்தில், சமுதாய சுகாதார வளாக கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருவதை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

புத்தாகரம் ஊராட்சியில் நபாா்டு கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.47.16 லட்சத்தில் மங்கனூா் முதல் கோணபட்டு வரை சாலை அமைக்கும் பணியை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சௌதமிழரசி, உதவி செயற்பொறியாளா் மஞ்சுநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணவாளன், பாலமுருகன், துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments