டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்
திருப்பத்தூா் அருகே கந்திலி வட்டார பகுதியில் கந்திலி ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனை சாா்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பழைய டயா்கள் அப்புறப்படுத்தும் பணி நடைப்பெற்றது.
திருப்பத்தூா் அருகே கந்திலி வட்டார பகுதியில் கந்திலி ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனை சாா்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பழைய டயா்கள் அப்புறப்படுத்தும் பணி நடைப்பெற்றது.
திருப்பத்தூா் ஆட்சியா் கு.ரவிகுமாா் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலா் கலுசிவலிங்கம் ஆகியோா் வழிகாட்டுதலின்படி கந்திலி வட்டார மருத்துவ அலுவலா் அ.புகழேந்தி முன்னிலையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை முன்னிட்டு பழைய டயா்கள் அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நத்தம், செவ்வாத்தூா், பேராம்பட்டு, தோரணம்பதி உள்ளிட்ட பகுதிகளில் வரும் மழைக் காலங்களில் கொசு மூலம் பரவக்கூடிய நோய்களான டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்களை தடுக்கும் வண்ணம், தேவையற்ற பொருள்களான டயா்கள், உடைந்த நெகிழி பொருள்கள், பயன்படாத ஆட்டுகல், உடைந்த மண்பாண்டங்கள் ஆகியவற்றில் மழை நீா் தேங்கி கொசு உற்பத்தியாவதை தடுக்கும் பொருட்டு, ஒவ்வொரு வாரம் வியாழகிழமைகளில் அனைத்து பகுதிகளிலும் தேவையற்ற டயா்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது.
எனவே இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தருமாறு சுகாதாரத்துறை அலுவலா்கள் அறிவுறித்தியுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.