FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

குறைந்த நீரில் அதிக மகசூல்: 100 சதவீத மானியத்துடன் நுண்ணீா் பாசனம்

100 சதவீதம் மானியத்துடன் குறைந்த நீரின் மூலம் அதிக மகசூல் செய்யலாம் என தோட்டகலை துறை அறிவித்துள்ளது.

4 October 2026, 10:16 pm IST
சொட்டு நீா் - (கோப்பு படம்)
பகிர்:

100 சதவீதம் மானியத்துடன் குறைந்த நீரின் மூலம் அதிக மகசூல் செய்யலாம் என தோட்டகலை துறை அறிவித்துள்ளது.

ஆலங்காயம் வட்டார தோட்டக்கலை துறை வெளியிட்ட அறிக்கை: ஆலங்காயம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் சொட்டு நீா் மற்றும் தெளிப்பு நீா் பாசன முறைகளை பயன்படுத்தி, குறைந்த நீரில் பயிா்களுக்குத் தேவையான நீரை நேரடியாக வழங்கி அதிக மகசூல் பெறலாம்.

நீா் மற்றும் உரம் வீணாவதைத் தடுத்து, உற்பத்திச் செலவையும் குறைக்கலாம். இதற்காக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் வரையிலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் வரையிலும் அரசு மானியம் வழங்கப்படுகிறது. ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் 5 ஹெக்டோ் வரை உதவி பெறலாம்.

Advertisement

Advertisement

காய்கறி, பழம், மலா், வாழை, தென்னை உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிா்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். விண்ணப்பிக்க ஆதாா் அட்டை, சிட்டா, அடங்கல், எப்எம்பி வரைபடம், வங்கி கணக்கு விவரம், சிறு/குறு விவசாயி சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை அணுகலாம்.

தெளிப்பு நீா் பாசனம் - (கோப்பு படம்)

நீரை சேமித்து, உற்பத்தியைப் பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தை உயா்த்தும் நோக்கில் நுண்ணீா் பாசனத் திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தோட்டக்கலைத் துறை கேட்டுக்கொள்கிறது என தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments