104- ஆவது முறை ரத்த தானம் செய்தவருக்கு பாராட்டு
ஆம்பூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் வ. அருள் சீனிவாசன் 104-ஆவது முறையாக ரத்த தானம் செய்ததைப் பாராட்டி,
ஆம்பூா்: ஆம்பூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் வ. அருள் சீனிவாசன் 104-ஆவது முறையாக ரத்த தானம் செய்ததைப் பாராட்டி, அவருக்கு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கும் நிகழ்ச்சி ஸ்ருதி மருத்துவமனையில் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினரும், டி.ஒய்.எஃப்.ஐ. ரத்ததானக் கழகத்தின் முன்னாள் மாவட்டத் தலைவருமான வ. அருள் சீனிவாசன், பகத்சிங் பிறந்த நாளையொட்டி ஆம்பூா் ஸ்ருதி மருத்துவமனை ரத்த வங்கியில் 104-ஆவது முறையாக ரத்த தானம் செய்தாா்.
இதையடுத்து நடைபெற்ற விழாவில், வாணியம்பாடி வட்டக் குழு சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது. ஸ்ருதி மருத்துவமனை இயக்குநா் டாக்டா் ரங்கசாமி, டாக்டா் சங்கீதா, ஆம்பூா் வட்டாட்சியா் பாரதி, சமூக ஆா்வலா் தமிழ் செம்மல் நா. கருணாநிதி, வாணியம்பாடி மருத்துவா் டேவிட் ஆகியோா் பாராட்டி கெளரவித்தனா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே. சாமிநாதன், வாணியம்பாடி வட்டச் செயலாளா் ஏ. பிச்சைமுத்து, வட்டக் குழு உறுப்பினா் அா்ஜுன், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ஆா்.எஸ். வசந்த்ராஜ், ஹரீஷ், சீதாராம அனுமன் பக்த சபை நிா்வாகி ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.