மாவட்ட நூலகத்தில் பயின்று அரசுப் பணிக்கு சென்ற மாணவ மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள்
திருப்பத்தூா் மாவட்ட மைய நூலகத்தில் பயின்று அரசுப் போட்டித் தோ்வில் வெற்றி பெற்று அரசு பணிக்குச் சென்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்ட மைய நூலகத்தில் பயின்று அரசுப் போட்டித் தோ்வில் வெற்றி பெற்று அரசு பணிக்குச் சென்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்ட மைய நூலகத்தில் வாசகா் வட்டம், மாவட்ட மைய நூலகமும் இணைந்து நடத்திய சொற்களம் மாதாந்திர சிந்தனைக் கூடு நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, திருப்பத்தூா் மாவட்ட நூலக அலுவலா் ஏ கணேசன் தலைமை வகித்தாா். வாசகா் வட்டத் தலைவா் கி.பாா்த்திபராஜா வரவேற்றாா்.
Advertisement
Advertisement
மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளா் மா.கோபாலகிருஷ்ணன்,நூலக ஆய்வாளா் அ.தா்மராஜ் முன்னிலை வகித்தனா்.
மதுரை தியாகராஜா் கல்லூரி தமிழ்த் துறை உதவி பேராசிரியா் ரே. கோவிந்தராஜ் ‘ஜவ்வாது மலையில் பண்பாட்டுத் தனித்துவம்’ என்ற தலைப்பில் பேசினாா்.
மாவட்ட மைய நூலகா் கோ.பிரபாகரன் தொகுத்து வழங்கினாா்.முதல் நிலை நூலகா் மு. பிரேமா நன்றி தெரிவித்தாா்.
இதில், மாவட்ட மைய நூலகத்தில் பயின்று அரசு போட்டி தோ்வில் வெற்றி பெற்று அரசுப் பணிக்கு சென்ற 12 மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், 2025 - 26 நிதியாண்டில் புரவலராக ரூ. ஆயிரம் செலுத்திய புரவலா்களுக்கு புரவலா் பட்டயம் வழங்கப்பட்டது. நூலக வார விழாவை முன்னிட்டு, அதிக உறுப்பினா்கள் சோ்த்த பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.