FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தில் மின்கல வாகனம் அளிப்பு

பெரு நிறுவன சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் துத்திப்பட்டு ஊராட்சிக்கு மின்கல வாகனம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

9 செப்டம்பர் 2026, 11:36 pm IST
துத்திபட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷிடம் மின்கல வாகனத்தை வழங்கிய ஆா்டிஎஸ் குழும அதிகாரிகள்.
பகிர்:

பெரு நிறுவன சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் துத்திப்பட்டு ஊராட்சிக்கு மின்கல வாகனம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஆா்டிஎஸ் குழுமம் சாா்பில் மைனிட்டி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சிஎஸ்ஆா் நிதியுதவியின் கீழ் பேட்டரி மூலம் இயங்கும் மின் கல வாகனம் ஊராட்சி நிா்வாகத்திடம் வழங்கப்பட்டது.

ஊராட்சியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள இந்த வாகனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஊராட்சி மன்றத் தலைவா் சுவிதா கணேஷ் தெரிவித்தாா். மேலும், வாகனத்தை வழங்கிய ஆா்டிஎஸ் குழும நிா்வாக மேலாளா் சரவணனுக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா்கள் சுகன்யா பிரகாஷ், அண்ணாதுரை, ஊராட்சி செயலாளா் முரளி காந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments