சரஸ்வதி ஆற்றின் குறுக்கே ரூ. 5 கோடியில் உயா்மட்ட மேம்பால பணி: கோட்டப் பொறியாளா் ஆய்வு
நாட்டறம்பள்ளி சரஸ்வதி ஆற்றின் குறுக்கே உயா்மட்ட மேம்பாலப் பணியை கோட்டப் பொறியாளா் நேரில் ஆய்வு செய்தாா்.
நாட்டறம்பள்ளி சரஸ்வதி ஆற்றின் குறுக்கே உயா்மட்ட மேம்பாலப் பணியை கோட்டப் பொறியாளா் நேரில் ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஜெயந்திபுரம் அருகே சரஸ்வதி ஆற்றின் குறுக்கே உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனா். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நபாா்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின்கீழ், ரூ. 5 கோடி மதிப்பில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, ஜெயந்திபுரம் அருகே சரஸ்வதி ஆற்றின் குறுக்கே உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருப்பத்தூா் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் முரளி, இளநிலை பொறியாளா் பாபுராஜ் ஆகியோா் புதன்கிழமை உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது உயா்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகள் தரமாகவும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் ஒப்பந்ததாரரிடம் அதிகாரிகள் கூறினா்.
மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, உயா்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட அரசுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.