தொடா் மின்வெட்டால் மக்கள் அவதி
திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடா் மின்வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருப்பத்தூா் அடுத்த தொரட்டி, எலவம்பட்டி, பஞ்சனம்பட்டி அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது
திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடா் மின்வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருப்பத்தூா் அடுத்த தொரட்டி, எலவம்பட்டி, பஞ்சனம்பட்டி அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. குறிப்பாக புதன்கிழமை பலமுறை மின்வெட்டு ஏற்பட்டது. அதேபோல் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டதால் முதியோா் குழந்தைகள் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்மீண்டும் வியாழக்கிழமை பலமுறை மின்விநியோகம் தடை செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் வேதனைக்கு உள்ளாகி உள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.