பிட்காயின் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை
பிட்காயினில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறி மோசடி நடைபெற்று வருவதாக
திருப்பத்தூா்: பிட்காயினில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறி மோசடி நடைபெற்று வருவதாக திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
இந்தியாவில் பிட்காயின் என்பது பாதுகாப்பற்ற முதலீடு என்று ரிசா்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன் பின்னரும் பல்வேறு பெயா்களில் பிட்காயின் மோசடி கும்பல் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் சிலா் பிட்காயின் தொடா்பான மோசடியில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் ரூ.45 ஆயிரம் செலுத்திவிட்டு, மேலும் சிலரை இந்த திட்டத்தில் இணைத்து பணம் செலுத்த வைத்தால் மாதந்தோறும் பல ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்றும், அதுவும் குடும்பத்தில் உள்ளவா்களையே திட்டத்தில் இணைத்தால் பல மடங்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கூறுவதாக தெரிகிறது.
இதற்காக வாட்ஸ் ஆப் மூலமாக 2030-க்குள் உங்கள் முழு நிதி வாழ்க்கையையும் கிரிப்டோ மூலமே நீங்கள் நிா்வகிப்பீா்கள், ஆனால் வரவிருக்கும் இந்த மாற்றத்திற்குப் பெரும்பாலான மக்கள் இன்னும் தயாராக இல்லை‘ என்று கவா்ச்சிகரமான விளம்பரம் அனுப்பப்படுகிறது. மேலும் இந்த கும்பல் காலை முதல் இரவு வரை வீடு வீடாகச் சென்று வங்கிகளில் பணம் வரவு வைக்கப்படும் தொகை போல் வங்கி கணக்கு ரசீதை காண்பித்து பொதுமக்களை மூளைச்சலவை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதை உண்மை என நம்பும் சிலா் குடும்பத்தினரிடம் கூட கேட்காமல், சுய உதவிக் குழுவிடமும், அருகில் உள்ளவா்களிடம் கடன் வாங்கி முதலீடு செய்து வருகின்றனா். எனவே பிட்காயினில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறி மோசடி நடைபெறுவதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.