ரயில் பயணிகளிடம் செயின் பறிப்பு: இளைஞா் கைது
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை ரயில்வே தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை ரயில்வே தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஜோலாா்பேட்டை மாா்க்கமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகளிடம் மா்ம நபா்கள் கைப்பேசி, நகை பறிப்பு போன்ற குற்ற சம்பவத்தில் ஈடுபடுகின்றனா். அவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபா்களை கண்காணிக்க ரயில்வே போலீசாா் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜோலாா்பேட்டை - காட்பாடி ரயில் நிலையங்களுக்கிடையே ரயில்களில் பயணித்த பெண் பயணியிடம் இளைஞா் ஒருவா் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளாா். அப்போது அந்தப் பெண் கத்தி கூச்சலிடமே கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுள்ளாா்.
Advertisement
Advertisement
பின்னா் இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே காவல் கண்காணிப்பாளா் ராஜன் உத்தரவின் பேரில் ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் சிவ செந்தில் குமாா் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனா்.
இந்நிலையில் புதன்கிழமை ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இளைஞா் ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளாா்.
இதில் சந்தேகம் அடைந்த போலீசாா் அவரை ரயில்வே காவல் நிலையம் அழைத்து சென்று தீவிரமாக விசாரித்தனா். விசாரணையில் அவா் விழுப்புரம் மாவட்டம் கானை கிராமம் இந்திரா நகா் பகுதியை சோ்ந்த ராஜன் என்பவரின் மகன் அஜய் (24) என்பதும் இவா் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பெண்ணிடம் ஒன்றரை பவுன் நகை பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து அவரிடம் இருந்து சங்கிலியை பறிமுதல் செய்த போலீஸாா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.