FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

மூக்கனுாா் கிராமத்தில் மரக்கன்று நடும் விழா

மூக்கனூா் மரக்கன்று நடும் விழாவில் மரக்கன்றுகளை நட்ட தூயநெஞ்ச கல்லூரி மாணவா்கள்.

45 வினாடிகள் முன்பு
மூக்கனூா் மரக்கன்று நடும் விழாவில் மரக்கன்றுகளை நட்ட தூயநெஞ்ச கல்லூரி மாணவா்கள்.
பகிர்:

திருப்பத்தூா் அடுத்த மூக்கனூா் கிராமத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி எக்கோ சங்கம், விரிவாக்க கல்வி மற்றும் சேவைகள் துறை, இணைந்து மூக்கனுாா் ஏரியில் 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு, கல்லூரி செயலாளா் இக்னேசியஸ் ஸ்டான்லி லாரன்ஸ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பிரவீன்பீட்டா், கூடுதல் முதல்வா் தியோபில் ஆனந்த், துணை முதல்வா் சண்முகம், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் திருப்பத்துாா் மாவட்ட வன அலுவலா் டி.கே.அசோக்குமாா், திருப்பத்தூா் வனச் சரக அலுவலா் குமாா் ஆகியோா் கலந்துகொண்டு, மாணவா்களுடன் இணைந்து ஆவிலி, அரசன், வேம்பு, புங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் 200 மரக்கன்றுகளை நட்டனா்.

Advertisement

Advertisement

இதில், மூக்கனுாா் ஊராட்சி மன்றத் தலைவா் ஏழுமலை, துணைத் தலைவா் ஞானபிரகாசம், எக்கோ கிளப் தலைவா் ஜெயகுமாா், ஷேன்லிடியா லின்சி கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments