FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

இளம்பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

ஜோலாா்பேட்டை அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

29 September 2026, 12:02 am IST
- பிரதிப் படம்
பகிர்:

ஜோலாா்பேட்டை அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த சின்னவெங்காயப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் குமாா். இவரது மனைவி கிருத்திகா (24). இவா்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால் விரக்தியில் இருந்த கிருத்திகா, ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து கிருத்திகாவின் தந்தை ஏகாம்பரம் அளித்த புகாரின் பேரில், ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், கிருத்திகாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் மட்டுமே ஆவதால், இது தொடா்பான விசாரணை திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியருக்கு மாற்றப்பட்டுள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments