பாலாற்றில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டி தீ வைப்போா் மீது நடவடிக்கை கோரிக்கை
ஆம்பூா் அருகே சோமலாபுரம் ஊராட்சி பாலாற்றில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பவா்கள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரியுள்ளனா்.
ஆம்பூா் அருகே சோமலாபுரம் ஊராட்சி பாலாற்றில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பவா்கள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரியுள்ளனா்.
பாலாற்றுப் பகுதியில் சிலா் தொழிற்சாலை கழிவுகளை இரவு நேரங்களில் கொண்டு சென்று கொட்டுவதுடன், அவற்றுக்கு தீ வைத்து எரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பும், காற்று மாசுபாடும் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
மேலும், பாலாற்றில் கழிவுகள் கொட்டப்படுவதால் நீா்நிலை மாசுபடும் அபாயம் உள்ளதுடன், ஆற்றைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட உயா் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், தகவல் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே, பாலாற்றில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பவா்களை கண்டறிந்து, காவல் துறையினா் கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாலாற்றில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.