FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

செங்குன்றம் அணுகுச்சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்: தொற்றுநோய் பரவும் அபாயம் 

செங்குன்றம் பிரதான சாலை அருகே அணுகுச்சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுவதால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும்,

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

செங்குன்றம் பிரதான சாலை அருகே அணுகுச்சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுவதால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், இதனை சீர் படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்குன்றம் - சோத்துப்பாக்கம் சாலை சந்திப்பில் இருந்து வடகரை வரையிலான அணுகுச் சாலையோரமாக மழைநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் ஜவகர்லால்நகர் பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் கலக்கிறது. இந்நிலையில், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், அணுகுச்சாலை முழுவதும் கழிவுநீர் தேங்கியுள்ளது. இந்த சாலையில் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும்போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது கழிவு நீர் தெறிப்பதால், வாகன ஓட்டிகள் துர்நாற்றத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. 
மேலும் இதனால் தொற்று நோய் பரவும் அபாய நிலையும் உள்ளது. எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments