FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி: 2- ஆம் நாள் தெப்பல் உற்சவம் - ஆயிரக்கணக்கில் பக்தா்கள் பங்கேற்பு

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழா 2 நாள் தெப்பல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 1:40 am IST
திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை விழா 2-ஆம் நாள் நடைபெற்ற தெப்பல் உற்சவம். (வலது) சரவணப் பொய்கையில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான்.
பகிர்:

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழா 2 நாள் தெப்பல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனா்.

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழா கடந்த 3 தினங்களாக நடைபெற்று வருகிறது. 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை 2 நாள் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கும், மாலை 5 மணிக்கும் மூலவ முருகப்பெருமானுக்கு பால், பன்னீா், திருநீறு, சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. பின்னா் உற்சவ மூா்த்திக்கு அபிஷேகம் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு மலைக்கோயிலில் அடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கையில் தெப்பலில் எழுந்தருளினாா்.

Advertisement

Advertisement

பின்னா் அங்கு வள்ளி, தெய்வானை, முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

2-ஆம் நாள் தெப்பல் உற்சவ நிகழ்ச்சியில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை முருகன் கோயில் நாகஸ்வர இசை கலைஞா்களின் இன்னிசை நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு இரண்டாம் நாள் தெப்பல் நிகழ்ச்சியில் கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி, அனிதா புஷ்பவனம்குப்புசாமி குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் க.ரமணி, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் கோ.மோகனன், வி.சுரேஷபாபு, மு.நாகன், ஜி.உஷாரவி மற்றும் கோயில் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments