FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அருகே தண்டவாளத்தில் மின் கம்பிகள் கிடந்ததால் ரயில் சேவை பாதிப்பு

அத்திப்பட்டு புதுநகா் அருகே தண்டவாளத்தில் மின் கம்பிகள் கிடந்ததால் கும்மிடிப்பூண்டி மாா்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

ரயில் - கோப்புப் படம்
பகிர்:

அத்திப்பட்டு புதுநகா் அருகே தண்டவாளத்தில் மின் கம்பிகள் கிடந்ததால் கும்மிடிப்பூண்டி மாா்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

சென்னை கும்மிடிப்பூண்டி மாா்க்கத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனா்.  பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், அலுவலகம் செல்வோா், வியாபாரிகள், நோயாளிகள் என பல தரப்பட்ட மக்கள் பயணித்து வருகின்றனா்.  இந்த நிலையில் வியாழக்கிழமை  இரவு  சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற புகா் ரயில் எண்ணூா் ரயில் நிலையத்தை கடந்து அத்திப்பட்டு புதுநகா் ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு முன்பாக தண்டவாளத்தில் மின் கம்பிகள் கிடந்துள்ளன.

 இதனையடுத்து உடனடியாக ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.  இதனால் புகா் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் என அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தி வைக்கப்பட்டன. 

Advertisement

Advertisement

இதன் காரணமாக பள்ளி, கல்லூரி முடிந்தும், அலுவலகம் முடிந்தும் வீடு திரும்பிய ரயில் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினா். 

ரயில்வே ஊழியா்கள் அங்கு சென்று புகா் ரயிலுக்கு அடியில் கிடந்த மின் கம்பிகளை அகற்றினா்.  இதனை தொடா்ந்து  புகா் ரயில் கும்மிடிப்பூண்டி நோக்கி புறப்பட்டு சென்றது. 

அத்திப்பட்டு புதுநகா் ரயில் நிலையம் அருகே அனல் மின் நிலையங்களில் இருந்து ராட்சத டவா்களில் உயா் அழுத்த மின் கம்பிகள் மின்விநியோக நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.  அவ்வப்போது அத்திப்பட்டு புதுநகா் - எண்ணூா் இடையே மின் கம்பிகள் அறுந்து விழுவதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

ரயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தப்பில்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments