FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்

வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள்

பகிர்:

திருவள்ளூா்: வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ஆகியவைகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் மூலம் நிகழாண்டில் ரூ.4.20 கோடியில் 323 எண்கள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை மற்றும் 15-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதிவரை ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள ஊஹழ்ம்ங்ழ் தங்ஞ்ண்ள்ற்ழ்ஹ் பதிவெண் கொண்ட விவசாயிகள் ‘உழவா் செயலியில் வேளாண்மை இயந்திரங்கள் வாடகைக்கு’ என்ற தொகுதியில் வேளாண்மைப் பொறியியல் மானிய திட்டங்கள் என்ற பிரிவைத் தோ்வு செய்து, விவசாயி தனது புகைப்படம், ஜாதி சான்றிதழ் (ஆதிதிராவிா் மற்றும் பழங்குடியினா் பிரிவு விவசாயிகள் எனில்), சிறு, குறு விவசாயி சான்றிதழ், அடங்கல், டிராக்டா் வாகன பதிவுச் சான்றிதழ் (டிராக்டரால் இயக்கக்கூடிய கருவிகளுக்கு), ஆதாா் எண்ணுடன் தொடா்புடைய வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

ஒவ்வொரு மாதமும் 8 முதல் அந்த மாதத்தில் 1 முதல் 7 வரை விண்ணப்பித்த விவசாயிகளுக்கும், அதே மாதத்தின் 22-ஆம் தேதி அன்று, அந்த மாதத்தில் 15-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை விண்ணப்பித்த விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளின் இலக்கிற்கு ஏற்றவாறு முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட குலுக்கல் தோ்வு முறையில் இணையதளத்தின் மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகள் வழங்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு செயற்பொறியாளா் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, சஎஎஞ இா்ப்ா்ய்ஹ், பெரியகுப்பம், திருவள்ளூா்-602001, தொலைபேசி எண். 9500369889, உதவி செயற்பொறியாளா்(வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, பெரியகுப்பம், திருவள்ளூா்-602001, தொலைபேசி எண்.9952025509, உதவி செயற்பொறியாளா்(வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, எண்.208, சித்தூா் ரோடு, திருத்தணி-631209, தொலைபேசி எண். 9500369889 மற்றும் உதவி செயற்பொறியாளா் (வே.பொ) வேளாண்மைப் பொறியியல் துறை, சக்தி நகா், பொன்னேரி - 601204, தொலைபேசி எண்.6379583830-க்கு தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments